தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'எதிர்காலம் குறித்த கவலை எனக்கில்லை' - கட்சித் தாவியவுடன் காலரை தூக்கி விட்ட பழனியப்பன் - Palaniappan byte

எதிர் காலத்தைப் பற்றி கவலைப்படாமல், உழைப்பதற்காக மட்டுமே திமுகவில் இணைந்ததாக பழனியப்பன் தெரிவித்துள்ளார்.

- கட்சி தாவியவுடன் காலரை தூக்கி விட்ட பழனியப்பன்
- கட்சி தாவியவுடன் காலரை தூக்கி விட்ட பழனியப்பன்

By

Published : Jul 3, 2021, 10:30 PM IST

சென்னை: அண்ணா அறிவாலயத்தில் அமமுக துணைப் பொதுச் செயலாளரும் முன்னாள் அதிமுக அமைச்சருமான பழனியப்பன், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பழனியப்பன், "முதலமைச்சர் ஸ்டாலின், ஜெயலலிதாவின் திட்டங்களை செயல்படுத்தி மக்கள் விரும்பிய தலைவராக இருக்கிறார். தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு வேண்டிய உதவிகளை நல்லாட்சி மூலம் செய்து கொண்டிருக்கிறார்.

பழனியப்பன் பேட்டி

தற்போதைய திமுக ஆட்சிக்காலம் தமிழ்நாட்டின் பொற்காலமாக மாறி இருக்கிறது. தமிழ்நாட்டின் உரிமைகள் மீட்கப்படும் என்றே திமுகவில் இணைந்தேன். அமமுகவில் இருந்து விலகியதற்கு மனக்கசப்பு எதுவும் கிடையாது. டிடிவி தினகரன் ஒரு நல்ல மனிதர்.

ஸ்டாலினுடன் பழனியப்பன்

அனைவரையும் ஒருங்கிணைத்து செல்லக்கூடிய ஆற்றல் மிக்க தலைவராக உருவெடுத்து இருக்கிறார் ஸ்டாலின். தமிழ்நாட்டு மக்கள் நல்ல தலைவரை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். எதிர் காலத்தைப் பற்றி கவலைப்படவில்லை. உழைப்பதற்காக மட்டுமே திமுகவில் இணைந்து இருக்கிறேன்"என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: டிடிவி தினகரன், சசிகலா விசுவாசி இப்போது அறிவாலயத்தில்

ABOUT THE AUTHOR

...view details