தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக அரசிற்கு ஆலோசனைகளை வழங்கத் தயாராக உள்ளேன்:அதிமுக முன்னாள் அமைச்சர் - அதிமுக முன்னாள் அமைச்சர்

சென்னை: கரோனா காலகட்டத்தில் அரசியலுக்கு அப்பாற்பட்டு, திமுக அரசிற்குத் தேவையான அனைத்து ஆலோசனைகளையும் வழங்கத் தயாராக உள்ளதாக அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

http://10.10.50.85:6060//finalout4/tamil-nadu-nle/thumbnail/17-May-2021/11795435_646_11795435_1621258881210.png
விஜயபாஸ்கர்

By

Published : May 17, 2021, 7:28 PM IST

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், 'உலகளாவிய கரோனா நோய்த்தொற்று இருக்கும் இந்த கால கட்டத்தில், இந்த நேரத்தில் அரசியலுக்கு அப்பாற்பட்டு, புதிய அரசிற்குத் தேவையான அனைத்து ஆலோசனைகளையும் வழங்கத் தயாராக உள்ளேன்' எனக் கூறினார்.

மேலும், பொதுமக்கள் அனைவரும் சுகாதாரத்துறையின் வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், தடுப்பூசி செலுத்திக்கொள்வது மிகவும் அவசியம் என்றும்; அதற்கு நானே உதாரணம் எனவும், தடுப்பூசி செலுத்திக்கொண்டதால் தான் கரோனா பாதிப்பு ஏற்பட்டு நுரையீரல் தொற்று ஏற்படாமல் இருந்ததாகவும் தெரிவித்தார்.

கரோனா அறிகுறி வரும் போதே பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், தாமாக எந்த சிகிச்சையும் எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும், மருத்துவரின் ஆலோசனை இல்லாமல், வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: தடுப்பூசி போட்டுக்கொண்ட விஜயபாஸ்கருக்கு கரோனா

ABOUT THE AUTHOR

...view details