கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. குறிப்பாக சென்னையில் கரோனா வைரஸ் பரவல் பூதாகரமாக அதிகரித்து வருகிறது.
அதனால் அரசும், சென்னை மாநகராட்சியும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.