சென்னை:பாரதிய ஜனதா கட்சியின் அறிவுசார் பிரிவின் மாநிலத்தலைவராக இருந்து பின்னர் ரஜினிகாந்த் தொடங்க இருந்த கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டு, ரஜினி கட்சி தொடங்காததால் இந்திய மக்கள் முன்னேற்றக்கட்சி எனும் பெயரில் தனிக்கட்சி தொடங்கியவர் அர்ஜூன மூர்த்தி. இவர் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார்.
பாரதிய ஜனதா கட்சியின் தலைமையகமான கமலாலயத்தில் அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜூன மூர்த்தி, "இன்று மீண்டும் பாஜகவில் சேர்ந்துள்ளேன். தமிழ்நாட்டில் பாஜக சிறப்பான அந்தஸ்தைப்பெற நான் உழைப்பேன். பதவி, அந்தஸ்துக்காக பாஜகவில் சேரவில்லை. ஆன்மிக அரசியல் தொடர்பான ரஜினியுடன் எனக்கு ஒத்த அரசியல் கருத்து இருந்ததால் இணைந்தேன்.