சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ராமசாமி, காரைக்குடி பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டம் ராட்சத குழாய்கள் கொண்டு வந்து போடப்பட்டு துளையிடப்பட்டு வருவதால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளதாக தெரிவித்தார். அதற்கு விளக்கமளித்த அமைச்சர் சி வி சண்முகம், வதந்திகளை மக்கள் நம்பவேண்டாம்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அறவே அனுமதி கிடையாது - அமைச்சர் - not allowed
சென்னை: தமிழ்நாட்டில் எந்த நிலையிலும் ஹைட்ரோகார்பன் தொடர்பான ஆய்வு, திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என, அமைச்சர் சண்முகம் உறுதியளித்துள்ளார்.
அமைச்சர்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது. எந்த நிலையிலும் தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது. மேலும், தமிழக விவசாய மக்களை பாதிக்கும் எந்த திட்டத்துக்கும் அரசு அனுமதி அளிக்காது என்றார்.