சென்னை: அயனாவரம் டாக்டர் அம்பேத்கர் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் ராகேஷ். இவர் அயனாவரம் நாகையா தெருவை சேர்ந்த தெபேந்திரா என்ற பெண்ணை கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்தநிலையில் தற்போது தெபேந்திரா ஐந்து மாத கர்ப்பிணியாக உள்ளார். இதனால் அயனாவரம் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்ததாக கூறப்படுகிறது. அந்த வகையில், தாய் வீட்டிற்கு சென்ற தெபேந்திரா அங்கேயே தங்கியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து தெபேந்திராவின் கணவர் ராகேஷ் குடிபோதையில் மாமியார் ஸ்டெல்லா மேரி வீட்டிற்கு சென்று தனது மனைவியை தன்னுடன் வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். இதனால் வாய்த்தகராறு ஏற்படவே ஒருவரை ஒருவர் கடும் வார்த்தைகளால் திட்டிக்கொண்டனர். ஒருகட்டத்தில் பிரச்சனை முற்றவே ராகேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவி தெபேந்திராவின் காது உள்ளிட்ட பகுதியில் சரமாரியாக வெட்டியுள்ளார். தடுக்க வந்த மாமியார் ஸ்டெல்லா மேரியையை வெட்டியுள்ளார்.