சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர்கள் சரவணன் - வரலட்சுமி தம்பதி. இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் விவாகரத்து பெற முடிவு செய்து கடந்த 2012ம் ஆண்டு விவகாரத்து வேண்டி குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
நீதிமன்ற வளாகத்தில் மனைவியை கத்தியால் குத்திய கணவன் - கத்திக்குத்து
சென்னை: குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்பாக விசாரணைக்கு வந்த மனைவியை நீதிமன்றத்தில் வைத்து கணவன் கத்தியால் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் இன்று விவகாரத்து வழக்கு விசாரணைக்கு வந்ததையடுத்து இருவரும் ஆஜராக நீதிமன்றம் வந்தனர். நீதிமன்ற வளாகத்தில் நின்றிருந்த தம்பதி இருவருக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த சரவணன் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவி வரலட்சுமியை சரமாரியாக குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் துடித்தவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் தப்பி செல்ல முயன்ற சரவணனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். நீதிமன்ற வளாகத்தில் வைத்து இளம் பெண் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.