தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மகனின் பள்ளிக் கட்டணத்தை வைத்து கணவர் சூதாட்டம்:மனமுடைந்து மனைவி தற்கொலை! - சென்னை செய்திகள்

சென்னை நந்தம்பாக்கத்தில் மகனின் பள்ளிக்கட்டணத்திற்கு வைத்திருந்த பணத்தை எடுத்து கணவர் சூதாட்டம் விளையாடி பணத்தை இழந்ததால் மனமுடைந்த மனைவி தற்கொலை செய்துகொண்டார்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல ; தற்கொலையை கைவிடுக
தற்கொலை எதற்கும் தீர்வல்ல ; தற்கொலையை கைவிடுக

By

Published : Jun 10, 2022, 9:39 PM IST

சென்னை:சென்னை நந்தம்பாக்கம் வடக்கு மாட வீதி 2ஆவது தெருவைச் சேர்ந்தவர் புவனேஸ்வரி (39). இவரது கணவர் சுரேஷ்பாபு (42). கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக சுரேஷ்பாபு வேலையில்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.

இந்நிலையில் சூதாட்டத்திற்கு அடிமையான சுரேஷ் சிந்தாதிரிபேட்டைக்கு அடிக்கடி சென்று பணம் வைத்து சூதாட்டம் விளையாடி, தொடர்ந்து பணத்தை இழந்து வந்ததாக கூறப்படுகிறது. மதுப்பழக்கத்திற்கும் அடிமையாகி அவ்வப்போது மனைவியுடன் சண்டையிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று (ஜூன் 9) தனது 9ஆவது வகுப்பு படித்து வரும் மகனின் பள்ளிக் கட்டணம் கட்டுவதற்காக வைத்திருந்த 20 ஆயிரம் ரூபாய் பணத்தை சுரேஷ் எடுத்துக்கொண்டு சிந்தாதிரிபேட்டையில் உள்ள சூதாட்ட கிளப்பில் சூதாட்டம் விளையாடியதாக கூறப்படுகிறது. இதில் பணத்தை இழந்ததை அறிந்து மனம் உடைந்தபோன மனைவி புவனேஸ்வரி வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தகவல் அறிந்து சென்ற நந்தம்பாக்கம் காவல்துறையினர் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல ; தற்கொலையை கைவிடுக

இதையும் படிங்க: ஆன்லைன் ரம்மியால் தொடரும் உயிரிழப்புகளும்... மீளும் வழிமுறைகளும்...

ABOUT THE AUTHOR

...view details