சென்னை திருவல்லிக்கேணி நீலம் பாஷா தர்கா பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜேஷ் மற்றும் ஜான்சன். இவர்கள் இருவரும் பெசன்ட் சாலை பூங்கா அருகே இன்று (ஜூலை 16) காலை நடந்து சென்றனர்.
சரமாரியாக வெட்டு
அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற 6 பேர் கொண்ட கும்பல் ராஜேஷ் மற்றும் ஜான்சன் ஆகியோரை கத்தியால் ஓடஓட சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியோடினர். இதில் பலத்த காயமடைந்த ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பலியாக, ஜான்சன் படுகாயத்துடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கொலை தொடர்பாக மெரினா காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
வழக்கு பின்னணி
விசாரணையில் கடந்த மாதம் 20ஆம் தேதி நடுக்குப்பம் பகுதியில் பெட்ரோல் குண்டு வீசியதாக ராஜேஷ், ஜான்சன் உட்பட 9 பேரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்ததும், கடந்த 8ஆம் தேதி இருவர் மட்டும் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்ததும் தெரியவந்தது.
கடந்த சில நாள்களாக மெரினா கடற்கரை காவல் நிலையத்தில் இருவரும் ஆஜராகி கையெழுத்திட்டு வருகின்றனர். அதேபோல் இன்று காலை கையெழுத்திட்டுச் செல்லும் வழியில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.
தீவிர விசாரணை
இதனையடுத்து கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து நடத்திய தீவிர விசாரணையில், அவர்கள் ஜான்சனை கொலை செய்யதான் வந்தார்கள் என்பது உறுதியானது. தொடர் விசாரணையில் மெரினாவில் குதிரை ஓட்டும் தொழில் செய்யக்கூடிய ஜான்சனுக்கும், மீனவரான அதே பகுதியைச் சேர்ந்த ரவுடி ஏழுமலையின் மனைவிக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது. மேலும் சமீபத்தில் ஏழுமலையின் மனைவிக்குப் பிறந்த குழந்தை ஜான்சன் சாயலில் இருப்பதால் அவரை கொலை செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது.
கொலைக்கான காரணம்
கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் ராஜேஷை கொலை செய்த ஏழுமலை, காத்தவராயன், லோகேஷ் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்த நிலையில், தலைமறைவாக உள்ள அருண்குமார், வீரா ஆகியோரை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:போலி நகைகளை வைத்து தங்க நகைககள் திருடிய பெண்கள் கைது