தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆண் நண்பரிடம் பேசுவதை கண்டித்த கணவர்.. ஆத்திரத்தில் மனைவி தற்கொலை முயற்சி! - கணவன் திட்டியதால் மனைவி தற்கொலை

சென்னையில் ஆண் நண்பரிடம் செல்போனில் பேசுவதை நிறுத்தி கொள்ளுமாறு கணவர் கண்டித்ததால், மனைவி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலை முயற்சி
தற்கொலை முயற்சி

By

Published : Jan 26, 2023, 1:02 PM IST

சென்னை:அண்ணா நகர் மூவேந்தர் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் அதே பகுதியில் பேன்சி ஸ்டோர் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி புவனேஷ்வரி. இவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

இந்நிலையில் அண்ணாநகர் எம்.ஜி.ஆர் காலனியைச் சேர்ந்த ஒரு நபருடன் புவனேஷ்வரிக்கு பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் நண்பர்களாகப் பழகி வந்துள்ளனர். மேலும் புவனேஷ்வரி வீட்டில் அடிக்கடி செல்போனில் தனது ஆண் நண்பருடன் பேசி வருவதைப் பார்த்து ஆத்திரமடைந்த கணவர் சுரேஷ், ஆண் நண்பருடன் பேசுவதை நிறுத்தி கொள்ளுமாறு பல முறை கண்டித்துள்ளார்.

இதே போல் நேற்றிரவும் தனது ஆண் நண்பரிடம் புவனேஷ்வரி பேசி வந்த போது பிரச்சினை ஏற்பட்டு கணவர் சுரேஷ் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த புவனேஷ்வரி இன்று அதிகாலை 3 மணியளவில் அனைவரும் உறங்கிய பிறகு, தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

புவனேஷ்வரியின் அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்தோர் புவனேஷ்வரியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அன்கு புவனேஷ்வரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அண்ணா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: வரதட்சணை கொடுமை: உருக்கமான வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்ட பெண்!

ABOUT THE AUTHOR

...view details