சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் சிவப்பிரகாசம் (40). இவர் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் வாங்கி விற்கும் தொழில் செய்துவந்தார்.
இவரது மனைவி சித்ரா செல்வி (38) ஸ்ரீபெரும்பத்தூர் அருகே உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றிவருகிறார். காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு ஜஸ்வந்த் ரத்தினம் (20) என்ற மகனும், நேத்ரா (12) என்ற மகளும் உள்ளனர்.
கடந்த மூன்று வருட காலமாக சிவப்பிரகாஷ், சித்ரா செல்வி, குழந்தைகள் ஒரே வீட்டில் வசித்து வந்தாலும், கருத்து வேறுபாடு காரணமாகஅவர்களுக்கிடையே பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்துவந்துள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சித்ரா செல்வியும், நேத்ராவும் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சேலம் சென்றிருந்தனர்.