தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மனைவியை கொலை செய்ய முயன்ற கணவர் கைது! - மனைவியை கொலை செய்ய முயற்சி கணவர்

சென்னை: ஆவடி அருகே மனைவியை கொலை செய்ய முயற்சித்த கணவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

husband-arrested
husband-arrested

By

Published : Dec 23, 2019, 12:42 PM IST

சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் குமரன்(37). இவரது மனைவி காமாட்சி(28). இவர்களுக்கு இரண்டு மகள் ஒரு மகன் உள்ளனர். காமாட்சிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞருக்கும் திருமணம் தாண்டிய உறவு இருப்பதாக கணவர் குமரனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததையடுத்து, கணவன், குழந்தைகளை விட்டுப் பிரிந்து காமாட்சி பெற்றோர் வீட்டுக்கு சென்றார். மேலும் இவர்களது விவாகரத்து வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காமாட்சி தனது மூன்று பிள்ளைகளை பார்ப்பதற்காக குமரன் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மது போதையிலிருந்த குமரன் பிள்ளைகளை பார்க்க வரக்கூடாது என காமாட்சியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

மனைவியை கொலை செய்ய முயற்சி கணவர்

அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த குமரன், கொலை செய்யும் நோக்கத்தில் மறைத்து வைத்திருந்த பீர் பாட்டிலை கொண்டு காமாட்சியை கழுத்து, வயிறு, தொடை என சரமாரியாக குத்தியுள்ளார். இதில் காமாட்சியின் உடலிருந்து ரத்தம் வெளியேறி வலியில் துடித்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், குமரனை கைது செய்தனர். கணவனே, மனைவியை கொலை செய்ய முயற்சித்தது ஆவடியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கோவை விமான நிலையத்தில் 6.99 கிலோ தங்கம் பறிமுதல்!

ABOUT THE AUTHOR

...view details