தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கணவன், மனைவி தாக்கப்பட்ட விவகாரம்: எஸ்.பி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு - HRC take suo motu

சென்னை: பூலாங்குறிச்சியில் கணவன் மனைவி தாக்கப்பட்ட புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Husband and wife attacked some crews, HRC take suo motu
Husband and wife attacked some crews, HRC take suo motu

By

Published : Aug 24, 2020, 4:05 PM IST

சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சியை சேர்ந்த தம்பதியான செந்தில்- பிரியதர்ஷினி கடந்த ஆகஸ்ட் ஒன்றாம் தேதி பிரகாஷ் மற்றும் அவரது உறவினர்களால் தாக்கப்பட்டனர்.

இந்த தாக்குதலில், கை எலும்பு முறிந்து செந்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கணவன், மனைவியை தாக்கிய பிரகாஷ் மற்றும் அவரது உறவினர்கள் மீது அளித்த புகாரில், அன்றைய தினமே பூலாங்குறிச்சி காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்தனர்.

அதன் பின்னர் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் கிராம மக்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

22 நாள்களாக புகார் மீது நடவடிக்கை எடுக்காததால், பூலாங்குறிச்சி காவல் நிலையம் முன்பு சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.செல்வம் உள்ளிட்ட கிராம மக்கள் பலரும் திரண்டு திடீரென ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட செய்தி பரவலாக வெளியானது.

இந்தச் செய்தியை அடிப்படையாக வைத்து தாமாக முன்வந்து தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு எடுத்தது. ஆணைய பொறுப்பு தலைவரான துரை.ஜெயச்சந்திரன் இந்த விவகாரம் குறித்து சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நான்கு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details