தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தீக்குளித்து பெண் உயிரிழந்த வழக்கில் தம்பதி கைது - tamilnadu latest news

சென்னை: தீக்குளித்து பெண் உயிரிழந்த வழக்கில் தம்பதி இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

கணவன், மனைவி கைது
கணவன், மனைவி கைது

By

Published : Jan 29, 2021, 1:01 PM IST

சென்னை ஆவடி அடுத்த மேல்பாக்கம் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர்கள் ஜெகதீஷ்-சரஸ்வதி தம்பதி.

இவர்களின் வீட்டுக்கு அருகே ஆட்டோ ஓட்டுநர் வினோத் என்பவர் தனது மனைவி பாவானியுடன் வசித்து வருகிறார். சரஸ்வதிக்கும் பாவானிக்கும் இடையே வழிப்பாதை தொடர்பான பிரச்னை இருந்தது. இது தொடர்பான வழக்கில் அம்பத்தூர் நீதிமன்றம் சரஸ்வதிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது.

இதைத் தொடர்ந்து சரஸ்வதிக்கு பவானி அடிக்கடி தொந்தரவு கொடுத்தார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான சரஸ்வதி மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளித்தார். இதில் படுகாயம் அடைந்த பெண்ணை, அக்கம்பக்கத்தினர் மீட்டு கீழ் பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். ஆனால் அவர் சிகிச்னை பலனின்றி உயிரிழந்தார்.

இதனிடையே எழும்பூர் நீதிபதி சரஸ்வதியிடம் மரண வாக்குமூலம் பெற்றார். அதனடிப்படையில் பவானி, அவரது கணவர் வினோத்தை காவல் துறையினர் கைது செய்தனர்.

இதையும் படிங்க: கோட்டாட்சியர் அலுவ‌ல‌க‌ம் அருகே பெண் தீக்குளித்து உயிரிழ‌ப்பு!

ABOUT THE AUTHOR

...view details