சென்னை: பூந்தமல்லியை அடுத்த அம்பாள் நகர் பகுதியைச் சேர்ந்த பாண்டியன்(40) என்பவருக்கு புவனேஸ்வரி(35), பரிமளா(30) என இரண்டு மனைவிகளும், இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். முதல் மனைவி புவனேஸ்வரி காலையில் வேலைக்குச் சென்று விட்டார். வீட்டில் பாண்டியனும் இரண்டாவது மனைவி பரிமளாவும் இருந்தனர். பிள்ளைகள் பள்ளிக்குச் சென்று விட்டு மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டில் பாண்டியன் தூக்குப் போட்டுத் தொங்கிய நிலையிலும், பரிமளா தரையிலும் சலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
கணவனும் இரண்டாவது மனைவியும் மர்ம மரணம்; தற்கொலையா..? கொலையா..? - இரண்டாவது மனை
பூந்தமல்லி அருகே கணவரும், அவரது இரண்டாவது மனைவியும் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். தற்கொலையா? அல்லது கொலையா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பூந்தமல்லி போலீசார், உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், கடந்த சில வருடங்களாக வெளிநாட்டில் வேலை செய்து வந்த பாண்டியன், சில மாதங்களுக்கு முன்புதான் சென்னை வந்தார் என்றும், கடந்த சில வாரங்களாக தனக்குச் சரியான தூக்கம் வரவில்லை என்றும், தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகக் கூறி வந்ததாகவும் தெரிகிறது. பாண்டியனின் இரண்டு கைகளும் பின்னால் கட்டப்பட்ட நிலையிலும், பரிமளா படுத்தபடி கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்ததால், தனது இரண்டாவது மனைவி பரிமளா மேல் மிகுந்த பாசம் கொண்ட பாண்டியன் பரிமளாவின் கழுத்தை இறுக்கி கொன்று விட்டு, அவரும் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவர் தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு பரிமளா தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் விசாரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். தங்களது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை எனக் கடிதம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இருந்தபோதும் இருவரின் இறப்பிலும் சந்தேகம் இருப்பதாகவும்- கொலையா? என்ற கோணத்திலும் விசாரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: வெளிநாட்டிலிருந்து திரும்பிய கணவன்; சந்தேகத்தால் மனைவி கொலை