தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வரதட்சணை கொடுமை: மனைவியின் ஆபாச படத்தை ஃபேஸ்புக்கில் பதிவேற்றிய கணவன்! - மனைவியின் ஆபாச படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்த கணவன்

சென்னை: வரதட்சணை தராததால் மனைவியின் ஆபாச படத்தை ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்த கணவனை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

மனைவியின் ஆபாச படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றம்
மனைவியின் ஆபாச படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றம்

By

Published : Aug 13, 2020, 7:29 PM IST

சென்னை திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயபாரதி (32). இவருக்கு, ஏற்கனவே திருமணமாகி பிரிந்து வாழ்ந்து வந்த அயனாவரத்தைச் சேர்ந்த திவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் 2015ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்தனர். இதையடுத்து இருவரும் கடந்த ஜனவரி மாதம் 10ஆம் தேதி திருமணம் செய்து கொண்டு அயனாவரத்தில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் ரூ. 10 லட்சம் வரதட்சணையாக கொடுக்கும்படி விஜயபாரதி நீண்ட நாட்களாக திவ்யாவிடம் கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதுமட்டுமில்லாமல் திவ்யாவின் ஆபாச படத்தை ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் கோபமடைந்த திவ்யா வில்லிவாக்கத்தில் உள்ள தனது தாயின் வீட்டிற்கு ஜூலை மாதம் சென்றார். மேலும், வரதட்சணை கொடுமை தொடர்பாக அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விஜயபாரதி மீது புகார் அளித்தார்.

இதனால் விசாரணைக்கு விஜயபாரதியை காவல் துறையினர் அழைத்த போது விழுப்புரத்தில் உள்ளதாகவும் இ-பாஸ் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 13) மீண்டும் தொலைபேசியில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் விஜயபாரதி தனது மனைவி திவ்யாவின் ஆபாச புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளார். இதனால் மனமுடைந்த திவ்யா தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக திவ்யாவின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் விஜயபாரதியை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details