இது தொடர்பாக சங்கம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன ஊழியர்கள், இ-சேவை மையங்களில் அலட்சியமாக வேலை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதன் நிர்வாக இயக்குநர் மே 17ஆம் தேதி எச்சரித்திருந்தார். இதற்கு ஊழியர்கள் தரப்பில், ஊழியர்களுக்கு சரியாக சம்பளம் வழங்கவில்லை என்றும், சேவை மையத்தில் தண்ணீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தனர்.
தமிழ்நாடு அரசை கண்டித்து ஐடி, ஐடிஇஎஸ் சங்கம் போராட்டம் அறிவிப்பு - Hunger Strike
சென்னை: தமிழ்நாடு அரசை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடத்தவுள்ளதாக ஐடி, ஐடிஇஎஸ் தொழிலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
போராட்டம்
இதனைதொடர்ந்து இ-சேவை, ஆதார் சேவை மைய ஊழியர்களை ஆதரித்தும், தமிழ்நாடு அரசை கண்டித்தும் ஐடி, ஐடிஇஸ் தொழிலாளர்கள் சங்கம் (Union of IT & ITES Employees) தலைமையில் தமிழ்நாடு முழுவதும் மே 31ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.