தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆசிரியை அடித்து கண் பார்வை இழந்த மாணவன்: பள்ளிக் கல்வித் துறைக்கு நோட்டீஸ்! - பள்ளிக் கல்வித் துறைக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

சென்னை: ஆசிரியை அடித்து மாணவன் கண் பார்வை இழந்த சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு மாநில மனித உரிமைகள் ஆணையம் பள்ளிக் கல்வித் துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

human rights commission send to notice education department student who beat the teacher and lost his eyesight issue
human rights commission send to notice education department student who beat the teacher and lost his eyesight issue

By

Published : Mar 4, 2020, 10:51 PM IST

மேடவாக்கம் அரசுப் பள்ளி மாணவன் தமிழ் ஆசிரியையால் தாக்கப்பட்டு இடது கண் பார்வை இழந்த சம்பவத்தை அடுத்து, பள்ளிக் கல்வித் துறைக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதில், “தண்டனை என்ற பெயரில் மாணவர்கள் மீதான தாக்குதல்களைத் தடுக்க பள்ளிக் கல்வித் துறை என்னென்ன நடவடிக்கை எடுத்துள்ளது? இந்தச் சம்பவத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஆசிரியை மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

ஆசிரியை தாக்கியதில் இடது கண் பார்வை இழந்த மாணவன் கார்த்திக்குக்கு என்ன நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது?” போன்ற அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக இரு வாரத்திற்குள் பதிலளிப்பதோடு, இது சம்மந்தமான விரிவான அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க:இரும்பு ஸ்கேலால் அடித்த அரசுப்பள்ளி ஆசிரியை: மாணவனுக்கு கண்ணில் பாதிப்பு!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details