தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கலாஷேத்ரா பாலியல் புகார்: மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை! - Democratic women Association

கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளின் பாலியல் புகார் விவகாரத்தில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

கலாஷேத்ரா கல்லூரி  பாலியல் புகார் விவகாரத்தை  தாமாக முன்வந்து விசாரக்கும்   மாநில மனித உரிமை ஆணையம்
கலாஷேத்ரா கல்லூரி பாலியல் புகார் விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரக்கும் மாநில மனித உரிமை ஆணையம்

By

Published : Apr 10, 2023, 6:20 PM IST

சென்னை: கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் புகார் விவகாரத்தில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த உள்ளது. கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் ஹரிபத்மன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவிகள் இரண்டு நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ள மாணவிகளிடமிருந்து புகார்கள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமிபத்தில் கேரளாவைச் சேர்ந்த முன்னாள் மாணவி ஒருவர் பேராசிரியர் ஹரிபத்மன் மீது அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கடந்த 2019ஆம் ஆண்டு முதுநிலை படிப்பின் போது பேராசிரியர் ஹரிபத்மன் பாலியல் ரீதியாகவும், தவறான நோக்கத்தில் தொடர்ச்சியாக நடந்து கொண்டதாகவும் தொந்தரவு காரணமாகப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தி விட்டுச் சென்றதாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் பேராசிரியர் ஹரிபத்மன் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் அடையாறு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனது நண்பர் வீட்டில் வைத்து பேராசிரியர் ஹரிபத்மனை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஹரிபத்மனை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகள் மீது நடைபெற்ற பாலியல் வன்முறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி தென் சென்னை மாவட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்(AIDWA), இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) மற்றும் இந்திய மாணவர் சங்கம்(SFI) அமைப்புகள் அவ்வப்போது கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கலாஷேத்ரா விவகாரத்தில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. கலாஷேத்ரா விவகாரம் தொடர்பாக 4 ஆசிரியர் மீது மாணவிகள் அளித்த புகாரின் பேரில் நாளிதழில் வெளியான செய்தியை வைத்து தாமாக முன்வந்து விசாரணையை தொடங்க உள்ளது. மாநில மனித உரிமை ஆணைய விசாரணை பிரிவு ஐஜி தலைமையில் இது தொடர்பான விசாரணை நடத்தி ஆறு வாரத்திற்குள் ஆணையத்திற்கு அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கு: நடிகர் ஆர்.கே.சுரேஷ் நேரில் ஆஜராக உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details