தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்செந்தூர் கோயிலில் ரூ.19.80 கோடி மதிப்பில் தடுப்புச் சுவர் - இந்து சமய அறநிலையத் துறை விளக்கம்!

சென்னை : திருச்செந்தூர் கோயிலில் கடலில் மூழ்கி பக்தர்கள் உயிர் இழப்பதைத் தடுக்க ரூ.19.80 கோடி மதிப்பில் தடுப்புச் சுவர் அமைக்கப்பட உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Huge amount spent for Prevention of drowning death
Huge amount spent for Prevention of drowning death

By

Published : Apr 8, 2021, 3:44 PM IST

தமிழ்நாட்டில் நீர் நிலைகளில் மூழ்கி ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னையைச் சேர்ந்த கோடீஸ்வரி என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு ராமேஸ்வரம், திருச்செந்தூர், கன்னியாகுமரி ஆகிய கடலோரப் பகுதிகளில் உள்ள கோயில்களுக்கு வரும் பக்தர்கள் கடலில் மூழ்கி உயிர் இழப்பதைத் தடுக்க, தமிழ்நாடு அரசும், இந்து சமய அறநிலையத் துறையும் தடுக்க திட்டம் ஒன்றை வகுக்கும்படி உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கானது மீண்டும் தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில் குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது தமிழ்நாடு அரசு, அறநிலையத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், திருச்செந்தூர் கோயிலில் கடலில் மூழ்கி உயிர் இழப்பதைத் தடுக்க சுமார் ரூ.19.80 கோடி மதிப்பில் 520 மீட்டர் அளவில் சுவர் அமைக்கப்பட உள்ளதாகவும், ராமேஸ்வரம் கடற்கரைப் பகுதி நகராட்சிக்கு உட்பட்டது என்பதால், நகராட்சி ஊழியர்கள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள பொற்றாமரை குளத்தில் கிரில் கதவுகள் எழுப்பப்பட்டு குளத்திற்குள் பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், கன்னியாகுமரி கோயிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் மூழ்கி உயிரிழப்பதைத் தடுக்க கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதேபோல் தமிழ்நாடு முழுவதும் உள்ள பிரதான கோயில் குளங்களில் பக்தர்களின் பாதுகாப்புக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பட்டியல் தரப்பட்டது.

மேலும் இது தொடர்பாக மனுதாரர் உரிய ஆலோசனை வழங்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

இதையும் படிங்க:

திருவிழாக்கள், மதம் சார்ந்த நிகழ்வுகளுக்குத் தடை - தமிழ்நாடு அரசு

ABOUT THE AUTHOR

...view details