சென்னை:தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே 5ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரையும், 11ஆம் வகுப்பிற்கு மே 10ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரையும், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரையும் நடைபெறுகிறது.
11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 25ஆம் தேதி(நாளை) முதல் மே 2ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இரண்டு கட்டங்களாக நடத்தவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் மூன்று மணிநேரமாக இருந்த செய்முறை பொதுத்தேர்வுக்கான கால நேரம் இரண்டு மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.