தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Hrithik Roshan: இணையத்தை கலக்கும் ஹ்ரித்திக் ரோஷனின் ஜிம் ஒர்க் அவுட்! - hirthik roshan viral pictures

பாலிவுட் திரையுலகில் தனக்கேன தனி ரசிகர் பட்டாளத்தை உடையவர் ஹ்ரித்திக் ரோஷன். அவரது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Hirhtik Roshan
ஹ்ரித்திக் ரோஷன்

By

Published : Jun 14, 2023, 5:59 PM IST

ஹைதராபாத்:பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகர் ஹ்ரித்திக் ரோஷன்(Hrithik Roshan). இவர் தனது உடலமைப்பை கச்சிதமாக வைத்துக்கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த புதன்கிழமை அன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தான் உடற்பயிற்சி செய்யும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில், "நீங்கள் தூண்டப்பட வேண்டும் என்றால், vitamin D'hoop ஐ விட சிறந்தது வேரெதுவும் இல்லை! மஞ்சள் நீளமாக மாறுவதுக்குள் அதில் ஊறிவிடுங்கள். #keepgoing" என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த பதிவில் ஹ்ரித்திக் ரோஷன் குறிப்பிட்ட ”D'hoop” என்ற வார்த்தை, தான் 2003 ஆம் ஆண்டு நடித்த கொய் மில் கயா (Koi Mil Gaya) படத்தில் வரும் ஜாடூ (Jadoo) என்னும் கதாபாத்திரம் கூறும் ஒரு வசனம். Dhoop என்றால் ஹிந்தி மொழியில் வெயில் என்று பொருள். இந்த புகைப்படத்தில் ஹ்ரித்திக் ரோஷன், தனது வீட்டின் பால்கனியில் வெயிலில் நனைந்தபடி உடற்பயிற்சி செய்வதையும், மேலாடை இன்றி ஜீன்ஸ், தொப்பி மற்றும் கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு, சைக்கில் ஓட்டுவது பொன்ற உடற்பயிற்சியில் ஈடுபடுவது அந்த கைப்படத்தின் மூலம் தெரிகிறது.

ஹ்ரித்திக் ரோஷனின் இந்த புகைப்படத்திற்கு தனது ரசிகர்கள் பலர் தங்களின் பாராட்டுகளையும், அன்பையும் கமெண்டுகள் மூலம் பகிர்ந்துள்ளனர். ஒரு ரசிகர், “நீங்கள் தான் என்னுடைய உத்வேகம்; நீங்கள் தான் என்னுடைய உணர்ச்சிகளும்” என்று உணர்ச்சிப்பூர்வமாக்கப் பதிவிட்டு இருந்தார். இன்னும் பலர் உணர்ச்சி பூர்வமான கமெண்டுகளை பதிவிட்டிருந்தனர்.

தன்னுடைய 49-வதில் ஹ்ரித்திக் ரோஷன் தன்னுடைய உடலமைப்பை கச்சிதமாக கடைப்பிடிப்பது, தன்னுடைய ரசிகர்களிடையே அதிகம் பகிரப்படுகிறது. “கிரிஷ்” திரைப்படத்தின் மூலம் ஹ்ரித்திக் ரோஷன் இந்தியா முழுவதும் புகழ் பெற்ற நடிகராக திகழ்கிறார். குறிப்பாக கிரிஷ் படத்தின் மூலம் குழந்தை ரசிகர்கள் பட்டாளத்தையும் பெற்றுள்ளார்

இதனிடையே ஹ்ரித்திக் ரோஷன், தீபிகா படுகோன் மற்றும் அனில் குமார் அகியோருடன் இணைந்து ஃபைடர் (Fighter) திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சித்தார்த் சிங் இயக்கி வருகிறார். இப்படம், 2024 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி திரைக்கு வருகிறது. மேலும், ஜீனியர் என்.டி.ஆர் உடன் இனைந்து வார் 2 (War 2) திரைப்படம் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:காயத்தில் இருந்து மீண்ட நடிகர் விக்ரம்.. விரைவில் 'தங்கலான்' ஷூட்டிங்கில் இணைகிறார்!

ABOUT THE AUTHOR

...view details