தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரூ.62 கோடி மதிப்பிலான கோயில்களின் சொத்துகள் மீட்பு - அறநிலையத்துறை அதிரடி - in Marundeeswarar Temple

சென்னை, மருந்தீஸ்வரர் திருக்கோயில் மற்றும் கோபிச்செட்டிப்பாளையம் தான்தோன்றியம்மன் திருக்கோயில் ஆகிய கோயில்களின் ரூ.62.50 கோடி சொத்துகளை மீட்டு அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

recovery-of-62-crore-property-belonging-to-temples
கோயில்களுக்கு சொந்தமான ரூ.62. கோடி சொத்து மீட்பு

By

Published : Jul 24, 2023, 9:58 PM IST

சென்னை: மருந்தீஸ்வரர் திருக்கோயில் மற்றும் கோபிச்செட்டிப்பாளையம் தான்தோன்றியம்மன் திருக்கோயில் ஆகிய கோயில்களின் ரூ.62.50 கோடி சொத்துகளை இன்று (ஜூலை 24) மீட்டு அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழகம் முழுவதும் இருக்கும் கோயில்களின் சொத்துகளைப் பாதுகாக்க தமிழக அரசும், இந்து சமய அறநிலையத்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த நிலையில் திருக்கோயில் பணி தடையில்லாமல் நடக்கும் வகையில், திருக்கோயிலுக்கு என ஒதுக்கப்பட்ட பல விவசாய நிலங்களை பலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனை மீட்கும் பணியில் இந்து சமய அறநிலையத்துறை தீவிராமக செயல்பட்டு வருகின்றது. மேலும், அறநிலையத்துறைக்கு செந்தாமாக உள்ள கட்டடங்கள் மற்றும் கடைகளுக்கான வாடகை நிர்ணயங்களைக் காலத்துக்கேற்ப உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சென்னை திருவான்மியூர், பிரசித்தி பெற்ற அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயிலுக்கு (Marundeeswarar Temple) சொந்தமான சொத்துகள் அக்கோயிலைச் சுற்றி ஏராளமாக உள்ளன. அதில் ஒன்று, கோயில் அருகில் இருக்கும் வணிக வளாகம் வணிக பயன்பாட்டிற்காக விடப்பட்டுள்ளது. இந்நிலையில், 4 கடைகளின் வாடகைதாரர்கள் நீண்ட காலமாக வாடகை செலுத்தாமலும், உள்வாடகைக்கும் விட்டிருந்தனர்.

ரூ.2.50 கோடி கடைகளுக்கு சீல்:மதிப்புள்ள இதனையடுத்து வாடகைதாரர்கள் மீது இந்து சமய அறநிலையத்துறையின் சென்னை மண்டல இணை ஆணையர் நீதிமன்றத்தில் சட்டப்பிரிவு 78-ன் படி வழக்கு தொடரப்பட்டது. இதன் உத்தரவுப்படி சென்னை மாவட்ட உதவி ஆணையர், வருவாய் மற்றும் காவல்துறை உதவியுடன் வாடகை செலுத்தாத கடைகள் பூட்டி சீலிடப்பட்டு திருக்கோயில் வசம் பெறப்பட்டன. இதன் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.2.50 கோடியாகும்.

4.57 ஏக்கர் புன்செய் நிலம் மீட்பு: இதேபோல், ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் வட்டம், மொடச்சூர் அருள்மிகு தான்தோன்றியம்மன் திருக்கோயிலுக்கு (Thanthondri Amman Temple) சொந்தமான 2,695 சதுரடி நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக ஈரோடு இணை ஆணையர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் அந்த திருக்கோயிலுக்கு சொந்தமான 4.57 ஏக்கர் புன்செய் நிலம் மீட்கப்பட்டு திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் ரூ.60 கோடியாகும்.

இந்து அறநிலையத்துறை நடவடிக்கையால் இரு திருக்கோயில்களுக்கு சொந்தமான ரூ.62.50 கோடி மதிப்பீட்டிலான சொத்துக்கள் இன்று திருக்கோயில்கள் வசம் பெறப்பட்டுள்ளன. இதுவரை 865 திருக்கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்று, ரூ.4,764 கோடி சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடதக்கது.

இதையும் படிங்க:Gyanvapi Case : தொல்லியல் துறை ஆய்வுக்கு இடைக்கால தடை - உச்சநீதிமன்றம் அதிரடி!

ABOUT THE AUTHOR

...view details