ஃபோனி புயல் காரணமாக தமிழகம், ஆந்திரா, ஒடிசா ஆகிய கடற்கரை ஒட்டிய மாவட்டங்களில் பலத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஃபோனி புயல், நாளை மாலை ஒடிசா கடற்கரையை நோக்கி செல்லும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஃபோனி புயலால் பயனில்லை- தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்
சென்னை: ஃபோனி புயலால் தமிழகத்துக்கு எந்த விதத்திலும் பயனில்லை என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப், ஃபோனி புயலால் தமிழகத்திற்கு பயனில்லை என தெரிவித்துள்ளார். மேலும், ஃபோனி புயல் வடக்கு நோக்கு நகர்ந்துவிட்டால் சென்னையில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் எனவும் கூறினார். ஃபோனி புயலால் சென்னையில் மழை வரும் என்று எதிர்பார்த்தால், சென்னையில் இந்த ஆண்டு முதல்முறையாக 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
சென்னை மட்டுமல்லாமல் வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் ஆகிய இடங்களிலும் கடுமையான வெப்பம் நிலவும் என்றும் அவர் தனது முகநூல் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார். ஃபோனி புயல் முன்னெச்சரிக்கையாக, தமிழகத்துக்கு 309 கோடியே 75 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.