சென்னை: கரோனா தொற்று சென்னை நகரில் முற்றிலும் கட்டுப்படுத்தபடவில்லை என்றாலும், பொதுமக்களின் தினசரி பணிகள் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கில் ஏற்கனவே விதிக்கப்பட்ட பொது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளது.
உணவுப் பொருட்களில் இருக்கும் கிருமி தொற்றிலிருந்து பாதுக்காத்துக்கொள்வது எப்படி? - மாநகராட்சி விளக்கம்! - corona infection
நோய் கிருமிகள் இல்லாத உணவுகளை சமைத்து சாப்பிடுவது குறித்து வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு இந்த நடைமுறைகளை தெரியப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சியால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் சராசரியாக தினந்தோறும் 1000-க்கும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்படும் நபர்கள் கண்டறியப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு தேவையான அடிப்படை பொருட்களை வாங்கச் செல்லும்போது பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடிக்க சென்னை மாநகராட்சி தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அதன்படி, பல்வேறு பொருட்களை வாங்க சந்தைக்கு செல்லும் முன் கைகளை சுத்தமாக சோப் பயன்படுத்தி கழுவிக்கொள்ள வேண்டும்.
பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்கிய பின்பு அவற்றை தண்ணீரில் சுத்தமாக கழுவி, பின்னர் சாப்பிடப் பயன்படுத்த வேண்டும். உணவுப் பொருட்களை 5 டிகிரி செல்சியல் குளிரில் பிரிஜ்ஜில் வைத்துக்கொள்ள வேண்டும். குறைந்தது 70 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் மாமிசம், முட்டை மற்றும் கடல் உணவுகள் ஆகியவற்றை வேகவைத்து சமைக்க வேண்டும். வெளியே செல்லும் முன்பும், சென்று வந்த பின்னும் கைகளை சுத்தமாக சோப் போட்டு கழுவ வேண்டும். நோய் கிருமிகள் இல்லாத உணவுகளை சமைத்து சாப்பிடுவது குறித்து வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு இந்த நடைமுறைகளை தெரியப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சியால் தெரிவிக்கப்பட்டுள்ளது.