தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புயல், மழையின்போது மின் விபத்துகளைத் தடுப்பது எப்படி? - தமிழ்நாடு அரசு மின் ஆய்வுத்துறை வழங்கிய அறிவுரை

மழைக் காலங்களில் பொதுமக்கள் தங்களது வீடுகளில் மின் விபத்துகள் ஏற்படாமல் தவிர்ப்பதற்கு கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து தமிழ்நாடு அரசு மின் ஆய்வுத் துறை அறிவுரைகளை வழங்கியுள்ளது.

chennai strom
chennai strom

By

Published : Nov 25, 2020, 3:42 PM IST

தமிழ்நாடு அரசு மின் ஆய்வுத்துறை வழங்கியுள்ள அறிவுரை

  • ஐ.எஸ்.ஐ. முத்திரைப் பெற்ற தரமான மின் சாதனங்களை மட்டுமே வாங்கிப் பயன்படுத்துங்கள்.
  • மின்சார விளக்குகளைப் பொருத்துவதற்கு முன்னரும், எடுப்பதற்கு முன்னரும் சுவிட்சை ஆஃப் செய்துவிடுங்கள்.
  • ரெப்ரிஜிரேட்டர், கிரைண்டர் போன்ற வீட்டு உபயோக மின் சாதனங்களுக்கு நில இணைப்புடன்கூடிய மூன்று பின் சாக்கெட் உள்ள பிளக்குகள் மூலமாக மட்டுமே மின் இணைப்பு கொடுங்கள்.
  • 30 ஏஎம் ஆர்.சி.சி.பி. அல்லது ஆர்.சி.பி.ஒ.வை (மின் கசிவுத் தடுப்பான்) பயனீட்டாளரின் இல்லங்களில் உள்ள மெயின் சுவிட்ச் போர்டில் பொருத்தி மின்கசிவினால் ஏற்படும் மின்விபத்தை தவிர்த்திடுவீர்.
  • ஒவ்வொரு வீட்டிற்கும் சரியான நில இணைப்பு (எர்த் பைப்) போடுவதுடன் அதனைக் குழந்தைகள் மற்றும் விலங்குகள் தொடாத வகையில் அமைத்து சரியாகப் பராமரிக்கவும்.
  • ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை உங்கள் வீட்டின் வயரிங்குகளைச் சோதனைசெய்து தேவைப்பட்டால் மாற்றிக் கொள்ளுங்கள்.
  • மின் இணைப்பிற்கு கூடுதலாக வயர்களை உபயோகிக்கும்போது அவைகளில் ஏதும் பழுதுகள் ஏதும் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • மின் கம்பத்திலோ அவற்றைத் தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளைக் கட்டாதீர்கள்.
  • மழைக் காலங்களில் மின்மாற்றிகள், மின்கம்பங்கள், மின்பகிர்வுப் பெட்டிகள், சேஃப்டி வயர்கள் ஆகியவற்றின் அருகே செல்லாதீர்கள்.
  • விவரங்களுக்கு மின்சார வாரியம் மற்றும் மின்சார ஆய்வுத் துறை அலுவலர்களை அணுகவும்.
  • தமிழ்நாடு மின்வாரிய மின் மாற்றிகள் மற்றும் துணைமின் நிலையத்திற்காகப் போடப்பட்டுள்ள வேலியின் அருகில் சிறுநீர் கழிக்கச் செல்லாதீர்கள்.
  • மின் வாரியத்தின் மேல்நிலை மின்சார கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு மின்சார வாரியத்தின் அலுவலர்களை அணுகவும்.
  • அவசர நேரங்களில் மின் இணைப்பினைத் துண்டிக்கும்வகையில் மின் கருவிகளின் சுவிட்சுகள் இருப்பிடம் அமைய வேண்டும்.
  • மின்சார தீ விபத்துக்களுக்குண்டான தீயணைப்பான்களை மட்டுமே மின்சாதனங்களில் தீவிபத்து ஏற்படும்போது பயன்படுத்த வேண்டும்.
  • உலர்ந்த மணல், கம்பளிப் போர்வை, உலர்ந்த ரசாயனப் பொடி அல்லது கரியமில வாயு ஆகிய தீயணைப்பான்களைப் பயன்படுத்தவும்.
  • மின்சாரத்தினால் ஏற்பட்ட தீயினை தண்ணீர் கொண்டு அணைக்க முயற்சிக்க வேண்டாம்.
  • தீ விபத்து மின்சாரத்தினால் ஏற்பட்டது எனில், உடனே மெயின் ஸ்விட்சை அணைத்துவிட வேண்டும்.
  • இடி அல்லது மின்னலின்போது உடனடியாக கான்கிரீட் கூரையிலான பெரிய கட்டடம் வீடு போன்ற பெரிய கட்டடங்களிலோ, உலோகத்தால் மேலே மூடப்பட்ட பேருந்து, கார், வேன் போன்ற வாகனங்களிலோ தஞ்சமடையுங்கள்.
  • இடி அல்லது மின்னலின்போது தஞ்சம் அடைய அருகில் எதுவும் இல்லாதபட்சத்தில், மின் கம்பிகள், மின் கம்பங்கள், மரங்கள், உலோகக் கம்பி வேலி போன்றவை இல்லாத தாழ்வான பகுதிகளைத் தேர்ந்தெடுங்கள்.
  • திறந்தநிலையில் உள்ள ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகில் இருக்காதீர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க:செம்பரம்பாக்கம் உபரி நீர் திறப்பு : அடையாற்றில் வெள்ளப்பெருக்கு

ABOUT THE AUTHOR

...view details