சென்னை: வீட்டில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் வாஷிங் மிஷின் மிக முக்கியமான ஒன்றாகும். தற்போதைய காலக்கட்டத்தில் அனைவரின் வீட்டிலும் வாஷிங் மிஷினை பயன்படுத்த தொடங்கி விட்டார்கள். ஆனால், துணி துவைக்கும் பணியை குறைப்பதற்கு வாங்கப்பட்ட மிஷினை சுத்தம் செய்வதை மிக பெரிய வேலையாக கருதுகின்றனர்.
துணிகளை சுத்தம் செய்வதற்கு தானே வாஷிங் மிஷின், அவற்றை ஏன் நாம் சுத்தம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் பலரின் மனதில் உள்ளது. வாஷிங் மிஷினை ஏன் சுத்தம் செய்ய வேண்டும்? எவ்வாறு சுத்தம் செய்ய வேண்டும் என்பதை இதில் காண்போம்.
ஏன் வாஷிங் மிஷினை சுத்தம் செய்ய வேண்டும்?
துணியில் உள்ள அழுக்குகளை நீக்குவதற்காக மிஷினைப் பயன்படுத்துகிறோம். அவ்வாறு அழுக்கு துணிகளை மிஷினில் போடும் பொழுது அவற்றில் உள்ள அழுக்குகள் மிஷினில் தங்குவதற்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு நாம் தொடர்ச்சியாக செய்யும் பொழுது மிஷினில் உள்ள இந்த அழுக்குகள் துணியில் பரவும் அபாயம் உள்ளது. ஏனென்றால் நாம் துணியை துவைத்து முடித்தவுடன் அவற்றை மூடி வைத்து விடுவோம். சூரிய வெளிச்சம் இல்லாமல், எப்பொழுதும் ஈரபதத்துடன் இருப்பதால் எளிதாக கிருமிகள் பரவ வாய்ப்புள்ளது.
குறிப்பாக காலனிகள் மற்றும் கால் மிதிகளை(மேட்) மிஷினில் சுத்தம் செய்வதால், அவற்றில் உள்ள அழுக்குகள் மிஷினின் தங்கி விடுகின்றன. மிஷினை சுத்தம் செய்யாமல் இருந்தால் அவை முழுவதுமாக பழுதாகி நின்று விடும். இதனால் மிஷின் சேதப்படுவது மட்டுமின்றி அவற்றின் ஆயுட்காலமும் குறைக்கிறது.
வாஷிங் மிஷினை சுத்தம் செய்யும் முறை?
பொதுவாக வாஷிங் மிஷினை சுடு தண்ணீரில் சுத்தம் செய்வது நல்லது. ஏனென்றால் சுடு தண்ணீரில் எளிதாக கிருமிகள் கொல்லப்படும்.
செய்முறை1:
- சமையல் சோடா மற்றும் வினிகரை நன்றாக கலந்து கொண்டு அவற்றை வாஷிங் மிஷினின் அனைத்து பகுதிகளிலும் தடவி ஊற வைக்க வேண்டும்.
- சிறிது நேரம் கழித்து ஸ்க்ரப்பரை வைத்து அனைத்து இடங்களிலும் தேய்க்கவும்.
- பிறகு காட்டன் துணியை வைத்து நன்றாக துடைத்து (சுடு தண்ணீர்) விடவும்.
செய்முறை 2:
- தேவையான அளவு தண்ணீரை சூடுபடுத்தி வெதுவெதுப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
- அதில் 2 அல்லது 3 ஸ்பூன் பேக்கிங் சோடாவைச் சேர்த்து கொள்ள வேண்டும் .
- இவற்றில் காட்டன் துணியை நனைத்து மிஷினை துடைக்க வேண்டும்.
- குறிப்பாக மிசினை சுத்தம் செய்யும் பொழுது ஸ்விட்ச் ஆஃப் செய்து விட்டு செய்ய வேண்டும்.
செய்முறை 3:
- சமையல் சோடா, எலுமிச்சை சாறு, துணி துவைக்கும் பவுடர் ஆகியவற்றை கலந்து கொள்ள வேண்டும்.
- ஸ்க்ரப்பரை வைத்து மிஷினின் அனைத்து இடங்களிலும் தேய்த்து கொள்ள வேண்டும்.
- சிறிது நேரம் கழித்து காட்டன் துணியை வைத்து தண்ணீரில் நனைத்து மிஷினை துடைக்க வேண்டும்.
- மெஷினில் இருக்கும் பெல்ட் பகுதி மற்றும் சோப்பு லிக்விட் போன்றவை போடும் இடத்திலும் சுத்தம் செய்ய வேண்டும்.
செய்முறை 4:
- மிஷினில் தேவையான அளவு தண்ணிர் நிரப்பி அவற்றில் வினிகர் மற்றும் ப்ளீச் ஊற்றி மிஷினை ஒரு நிமிடத்திற்கு செயல்படுத்தவும்.
- ஒரு நிமிடம் கழித்து ஆஃப் செய்து, ஒரு மணி நேரம் இருக்கட்டும்.
- இந்த நேரத்தில் மிஷினில் அகற்ற முடிந்த பொருள்களை அகற்றி கையால் சுத்தம் செய்யவும்.
- ஒரு மணி நேரத்திற்கு பிறகு மிஷினில் உள்ள தண்ணீரை அகற்றி காட்டன் துணியால் மிஷினை சுத்தம் செய்ய வேண்டும்.
- பிறகு சிறிது நேரத்திற்கு மிஷினை திறந்த நிலையில் உலர வைக்கவும்.
வாஷிங் மிஷினை பாரமரிப்பதற்கான வழிமுறைகள்:
- துணிகளை துவைத்து முடித்தவுடன் மிஷினில் இருந்து துணிகளை விரைவில் எடுக்கவும்.
- மிஷினில் இருந்து துணியை எடுத்தவுடன் அவற்றை சிறிது நேரத்திற்கு திறந்து வைக்கவும். இது மிஷினில் ஈரப்பதம் தங்குவதை தடுக்கும்.
- வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறையாவது மிஷினை காட்டன் துணியால் துடைக்க வேண்டும்.
- மிஷின் மீது மற்ற பொருள்களை வைப்பதை நிறுத்த வேண்டும்.
இதையும் படிங்க:வாஷிங் மெஷின இப்படித்தான் யூஸ் பண்றீங்களா? தப்பாச்சே.. இனிமே இப்படி ட்ரை பன்னுங்க.!