சென்னை:பட்டாசு வெடிப்பாதல் ஏற்படும் கண் எரிச்சல் கான்டாக்ட் லென்ஸ் அணிந்திருப்பவர்களுக்கு அதிக எரிச்சலை விளைவிக்கக்கூடும் என டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் பிராந்திய தலைவரும், கண்மருத்துவருமான சௌந்தரி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, “தீபாவளி என்றாலே புத்தாடைகள், பரிசுகளைப் பகிர்ந்துகொள்ளுதல் மற்றும் பட்டாசுகள், வானவேடிக்கைகள் என்பவை நமக்கு நினைவுக்கு வரும்.
பட்டாசுகளை வெடிப்பதற்கு வயது ஒரு காரணியாக இருப்பதில்லை. அனைவருமே பட்டாசு வெடிப்பதையும், வானவேடிக்கைகளையும் விரும்புகின்றனர் என்பதில் எந்த ஐயமும் இருக்க இயலாது. பட்டாசுகளோடு தீபாவளி திருநாளைக் கொண்டாடுவது ஒரு பாரம்பரியமாகவே இருந்து வருகின்ற நிலையில், அவைகளைக் கையாளும்போது கூடுதல் கவனம் செலுத்துவது அத்தியாவசியமாகும்.
தீபாவளி கொண்டாட்ட காலத்தின்போது பட்டாசுகளாலும், வானவேடிக்கைகளாலும் நிகழ்கின்ற பெரும்பான்மையான காயங்கள், கண்கள் மீது நேரடி பாதிப்பை ஏற்படுத்துகின்றன. சில நேரங்களில் மிகக் கடுமையான காயங்கள் கூட ஏற்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பட்டாசுகள் வெடிப்பதன் காரணமாக, பிரதானமான கண் காயங்கள் அதிக எண்ணிக்கையில் ஏற்படுவதாக அறியப்படுகிறது.
உண்மையில் கைகள் மற்றும் விரல்களுக்குப் பிறகு மிக அதிகமாகப் பாதிக்கப்படுகின்ற உடற்பகுதியாக இருப்பது கண்கள் தான். பொதுவா மத்தாப்புகள், சங்குச்சக்கரங்கள், வெடி ஆகியவற்றை வெடிக்கும்போது எதிர்பாராதவிதமாகக் கண்களில் காயங்கள் ஏற்படுகின்றன.
அதிக இடர் ஆபத்துள்ள நபர்கள்
கண் காயங்கள் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்பு உள்ளவர்கள் பட்டாசுகள், வெடிகளைக் கையாள்கின்ற நபர்களோடு அருகில் நின்று வேடிக்கை பார்ப்பவர்கள் தான். இப்படி அருகிலிருந்து வேடிக்கை பார்க்கும் 50 விழுக்காட்டிற்கும் அதிகமான நபர்களுக்குக் கண் காயங்கள் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்பு இருக்கிறது. சாலைகளில் பட்டாசுகளை வெடிக்கும்போது, அச்சாலைகளைக் கடந்து செல்கின்ற நபர்கள் இவற்றால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நபர்களாக இருக்கின்றனர்.
காயங்களின் வகை
கண்களில் ஏற்படும் காயங்களின் தீவிர தன்மையானது லேசான எரிச்சலிலிருந்து விழித்திரையில் சிக்கல்களை விளைவிக்கின்ற கருவிழி சிராய்ப்புகள் வரையிலும் மற்றும் பார்வைத்திறன் இழப்பிற்கு வழி வகுக்கின்ற காயம் வரை இருக்கக்கூடும். பட்டாசுகள் மற்றும் வெடிகளில் கலக்கப்படுகின்ற வெடிமருந்துகளில் உள்ள வேதிப்பொருள்களின் காரணமாக வேதியியல் காயங்களும் ஏற்படுகின்றன.
வெடிகளினால் ஏற்படுகின்ற தொடர் புகையானது, தொண்டையிலும் மற்றும் கண்களிலும் எரிச்சலை ஏற்படுத்தி, கண்களிலிருந்து நீர் வழியச் செய்யும். பட்டாசு வெடிக்கும்போது வெளிவருகின்ற புகையானது, தொண்டை அழற்சியோடு, அதில் பிற தொற்றுகளையும் விளைவிக்கக்கூடும். மத்தாப்புகள் மிக ஆபத்தானவையாகும். ஏனெனில், தங்கத்தை உருக்கும் அளவிற்குத் திறனோடு (1,800° F) உயர் வெப்பநிலையில் அவைகள் எரிகின்றன.
தண்ணீரின் கொதிநிலையை விட ஏறக்குறைய ஆயிரம் டிகிரி இந்த வெப்பநிலையானது அதிகமாகும். கண்ணாடியையே உருக்கிவிடும் அளவிற்கு இருக்கும். இதனால், சருமத்தில் மூன்றாவது நிலை தீக்காயங்கள் ஏற்படக்கூடும். எனவே, இத்தகைய காயங்கள் ஏற்படாமல் தவிர்ப்பதற்கு அவசியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுவது அவசியமாகும்.
பெரும்பாலான வெடிகள் மற்றும் பட்டாசுகளில் வெடிமருந்து அடைக்கப்பட்டிருக்கிறது. பட்டாசுகள் மற்றும் வெடிகள் வெடிப்பதை முன் கணிக்க இயலாது என்பதால், அதைக் கையாளும் நபர் கவனமாக இருந்தாலும் அல்லது ஒருவரது மேற்பார்வையின் கீழ் வெடித்தாலும் கூட காயங்கள் ஏற்படக்கூடும். தீபாவளி கொண்டாட்ட தினங்களின் போது காற்றில் மாசு அளவுகள் உச்சத்தை எட்டுகின்றன. காற்றில் நைட்ரஸ் ஆக்சைடு மற்றும் சல்பைட் ஆக்சைடு அளவுகள் கணிசமாக அதிகரிக்கின்றன.
அத்துடன், ஒலி மாசு அளவும் அனுமதிக்கப்பட்ட அளவையும் கடந்து விடுகின்றன. புஸ்வானம் மற்றும் உயரே சென்று வெடிக்கும் ராக்கெட்டுகள் போன்றவற்றில் எண்ணற்ற சிறுதுகள்கள் அடைக்கப்பட்டுள்ளன. இவைகள் அதிவேகத்தில் பயணிப்பதால் திசுக்களுக்குச் சேதத்தை விளைவிக்கின்றன. நீண்டநேரம் நேரடி வெப்ப சூழலுக்கு உட்படுத்தப்பட்டால், கண்களில் அணிந்துள்ள கான்டாக்ட் லென்சுகள் கண்களுக்கு எரிச்சலை விளைவிக்கக்கூடும்.
எனவே, பட்டாசுகளை வெடிக்கின்றபோது கான்டாக்ட் லென்சுகளை அணிந்திருக்கும் நபர்கள் இருமடங்கு எச்சரிக்கையாக இருக்கவேண்டும். சுருக்கமாகக் கூறுவதென்றால், பட்டாசுகள் , வெடிகளால் கண்களுக்கு ஏற்படுகின்ற சேதமானது அந்த வெடியின் திசை வேகத்தை அல்லது கண்ணைத் தாக்குகின்ற அதன் தீவிரத்தைச் சார்ந்திருக்கும். கண்ணில் ஏற்படுகிற வேதியியல் மறுவிளைவுகள் மற்றும் வெப்ப நிலையிலான தீ காயங்களைச் சார்ந்தும் கண்ணில் சேதம் இருக்கும்.
கண்களில் ஏற்படக்கூடிய முக்கியமான காயங்கள்