தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் அபராதம் எவ்வளவு? - How much is the prohibited plastic fines in TN?

சென்னை: உள்ளாட்சிப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் வைத்திருந்தது தொடர்பாக கடந்த ஆண்டு மட்டும் 4.18 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் அபராதம் எவ்வளவு?
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் அபராதம் எவ்வளவு?

By

Published : Mar 16, 2020, 4:22 PM IST

2019 ஜனவரி 1ஆம் தேதி முதல் ஒருமுறை மட்டும் பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழ்நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதில் உள்ளாட்சிகளில் கடந்த டிசம்பர் 2019 வரை 81,826 முறை சோதனை நடத்தப்பட்டு 947 மெட்ரிக் டன் நெகிழி பறிமுதல் செய்யப்பட்டு 4.18 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி பேரூராட்சிகளில் 83,561 முறை சோதனை மேற்கொள்ளப்பட்டு 119 மெட்ரிக் டன் நெகிழி பறிமுதல் செய்யப்பட்டு ரூ. 106 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் 2020 ஜனவரி முதல் 23,900 முறை சோதனை மேற்கொள்ளப்பட்டு 8.70 மெட்ரிக் டன் நெகிழி பறிமுதல் செய்யப்பட்டு ரூ.14.40 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது என நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் உள்ளது.

இதையும் படிங்க...சட்டப்பேரவை நிகழ்வுகள்: உடனுக்குடன் வழங்குகிறது நமது ஈடிவி பாரத்...

ABOUT THE AUTHOR

...view details