சென்னை: பள்ளிகள் திறக்கப்பட்டதும் சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும் என்று அரசு அறிவித்திருக்கிறது. பள்ளிக் கல்வித் துறையில் விசாரித்தபோது இதுகுறித்த தகவல் வெளியாகியுள்ளது.
9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் வகுப்புகள் நடைபெறும். வீட்டில் இருக்கின்ற போது வழக்கம்போல் ஆன்லைன் வழியிலும், கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் மாணவர்கள் கல்வி கற்க வேண்டும்.
10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தினமும் நேரடி முறையில் வகுப்புகள் நடைபெறும்.
காலையில் 3 பிரிவு, மாலையில் இரண்டு பிரிவு என ஒரு நாளைக்கு ஐந்து வகுப்புகள் நடத்த திட்டமிட்டுள்ளனர். ஒவ்வொரு வகுப்பும், வழக்கமான 45 நிமிடத்திற்கு பதிலாக, தலா ஒரு மணி நேரம் நடைபெறும்.
நகர்ப்புறங்களில் இருக்கக்கூடிய அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அதற்கேற்ப வகுப்புகளை பிரித்து பாடம் எடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் பள்ளிகளுக்கு வருவதா அல்லது ஆன்-லைன் வழியில் கல்வி கற்பதா என்பது குறித்து அவர்களே முடிவு செய்து கொள்ளலாம்.
வருகைப் பதிவேடு கட்டாயம் கிடையாது. வருகைப் பதிவேடுக்கு எந்த வித மதிப்பெண்களும் கிடையாது.
குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் அடிப்படையில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும். அதன்படி 10, 11 ,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 60 விழுக்காடு வரை பாடங்கள் நடைபெறும்.
மேலும், ஒரு வகுப்பறையில் 20 மாணவர்கள் அமரும் வகையில் இட வசதி ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுழற்சி முறையில் வகுப்புகள் எப்படி நடக்கும்? - சுழற்சி முறையில் வகுப்புகள் எப்படி நடக்கும்?
மாணவர்கள் பள்ளிகளுக்கு வருவதா அல்லது ஆன்-லைன் வழியில் கல்வி கற்பதா என்பது குறித்து அவர்களே முடிவு செய்து கொள்ளலாம் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

how-classes-to-be-conduct-during-corona
இதையும் படிங்க:கே.டி.ராகவன் விவகாரம் - அண்ணாமலை சொல்வது என்ன?
TAGGED:
பள்ளிக் கல்வித் துறை