தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா சிகிச்சை மையமாக மாறும் குடியிருப்புகள்; அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு - madras high court

சென்னை: தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி கட்டிடத்தில் கரோனா சிறப்பு வார்டு அமைப்பதற்காக வீடுகள் ஒதுக்கப்பட்ட குடியருப்பு உத்தரவை ரத்து செய்யக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றம்
நீதிமன்றம்

By

Published : May 21, 2020, 11:42 PM IST

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த செல்வா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் வீடு இல்லாதவர்களுக்கு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் கேசவப்பிள்ளை பார்க் பகுதியில் கடந்த 1970ஆம் ஆண்டு குறைந்த வாடகையில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி கொடுக்கப்பட்டன.

40 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் கட்டிடம் என்பதால் கடந்த 2018ஆம் ஆண்டு இக்கட்டிடம் இடிக்கப்பட்டது. ஒராண்டுக்குள் வீடு கட்டித்தரப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தும், வீடுகள் கட்டித் தராததால் மீண்டும் சாலையோரங்களில் மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், புதிதாகக் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியருப்பை பயனாளிகளுக்கு வழங்காமல் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் இடமாக பயன்படுத்த உள்ளதாக பயனாளிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

கரோனா நோயாளிகளிக்கு போதுமான மருத்துவமனை மற்றும் படுக்கை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ள நிலையில், உலக சுகாதார நிறுவனத்தின் விதிமுறைக்கு மாறாக குடியிருப்புகள் சிகிச்சை மையமாக மாற்றப்பட உள்ளது.

அதனால், இடைக்கால உத்தரவாக குடியிருப்புகளை சிகிச்சை மையமாக மாற்றுவதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும், வீடுகள் ஒதுக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக வீடுகளை வழங்க குடிசை மாற்று வாரியத்திற்கு உத்தரவிட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ், பி.டி ஆஷா அமர்வு, கரோனா சிறப்பு வார்டு அமைப்பதற்காக வீடுகள் ஒதுக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக்கூடாது எனவும், சாலைகளில் வசிக்கும் மக்களை நேரில் ஆய்வு செய்து ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details