சென்னை பெருநகர மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள காலிமனைகள் அனைத்தும் சென்னை மாநகராட்சி வரி விதிப்பிற்கு உட்படுத்தப்பட வேண்டும். நகராட்சியில் காலியாக உள்ள வீட்டு மனைகள் தொடர்பாக உரிமையாளர்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் கொடுத்துள்ள மனுக்களின் அடிப்படையிலும், மாநகராட்சி அலுவலர்களால் நடத்தப்படும் கள ஆய்வுப் பணிகளினாலும் காலி மனைகளின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. இதில் பல்வேறுப் பகுதிகளில் உள்ள காலி மனைகள் வரிவிதிப்பிற்கு உட்படுத்தப்படாமல் உள்ளது தெரியவந்துள்ளது.
அனைத்து மனைகளும் வரிவிதிப்பிற்கு உட்பட்டதாகயில்லை என்றால் நடவடிக்கை! - சென்னை முனிசிபல் கார்பரேஷன்
சென்னை: மாநகரப் பகுதிகளிலுள்ள அனைத்து காலி மனைகளும் வரிவிதிப்பிற்கு உட்பட்டதாக இருக்கவில்லை எனில் சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

எனவே, சட்டப்படி சம்மந்தப்பட்ட மனைகளின் உரிமையாளர்கள் தங்களின் மனைகள் வரிவிதிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளதா என உறுதி செய்துகொள்ள வேண்டும். வரி விதிப்பிற்கு உட்படுத்தப்படாமல் இருந்தால் உடனடியாக விரி விதிப்பிற்கு உரிமைக்கோரும் ஆவணங்களை அந்தந்த மண்டல அலுவலகங்களில் சமர்ப்பித்து வரி விதிப்பிற்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும். வரி விதிப்பிற்கு உட்படுத்தப்படாத மனைகளின் உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கைகள் மாநகராட்சி நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:ரிப்பன் மாளிகையில் ஆபத்தான விரிசல்: கண்டுகொள்ளுமா மாநகராட்சி?