தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில் யோகி பாபு! - vels film international company

இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில் யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் "சட்னி சாம்பார்" என்ற இணையத்தொடரை ஹாட்ஸ்டார் வெளியிடுகிறது.

chatni sambar movie
”சட்னி சாம்பார்” திரைப்படம்

By

Published : Jul 19, 2023, 3:17 PM IST

சென்னை: நடிகர் எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான பொம்மை படத்தை இயக்கிய ராதா மோகன் தற்போது 'சட்னி சாம்பார்' என்ற இணையத்தொடரை இயக்குகிறார். இதில் நடிகர் யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த இணையத்தொடரை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது.

இதில் வாணிபோஜன்,'கயல்' சந்திரமௌலி, நிதின் சத்யா, சார்லி, குமரவேல், காயத்ரி ஷான், தீபா, நிழல்கள் ரவி, ஐஸ்வர்யா, சம்யுக்தா விஸ்வநாத் மற்றும் நம்ரிதா ஆகியோரும் நடிக்கவுள்ளார்கள். பிரபல தயாரிப்பாளரும் இயக்குநருமான ஆர். சுந்தர்ராஜன் இந்த சீரிஸில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். இதில் இளன், அகிலன் மற்றும் கேசவ் ராஜ் ஆகிய மூன்று குழந்தை நட்சத்திரங்களும் நடிக்கவுள்ளனர்.

இந்த இணையத் தொடருக்கு பிச்சைக்காரன், சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற பிளாக்பஸ்டர் படங்களில் பணியாற்றிய பிரசன்னா குமார் ஒளிப்பதிவு செய்கிறார். சூப்பர் சிங்கர் போட்டியில் வென்று புகழ் பெற்ற அஜீஷ் அசோக் இசையமைக்கிறார். அதுமட்டுமல்லாமல், இரும்புத்திரை, சர்தார், கைதி மற்றும் மாஸ்டர் போன்ற படங்களில் பணியாற்றிய எழுத்தாளர் பொன் பார்த்திபன், இந்த ஒரிஜினல் சீரிஸுக்கான வசனங்களை எழுதியுள்ளார்.

இதையும் படிங்க:விஜய் அரசியலுக்கு வந்தால் நல்ல விஷயம்தான் - யுவன் ஷங்கர் ராஜா

இதனையடுத்து, இந்த இணையத்தொடர் பூஜையுடன் சமீபத்தில் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில், இது குறித்து, இயக்குநர் ராதாமோகன் கூறுகையில், "சட்னி - சாம்பார்' சீரிஸின் படப்பிடிப்பை, அட்டகாசமான குழுவுடன் இணைந்து, மகிழ்ச்சியுடன் துவங்கியிருக்கிறோம். இது முழுக்க முழுக்க காமெடியாக அனைவரும் ரசிக்கும்படியான படைப்பாக இருக்கும். யோகி பாபு மற்றும் வாணி போஜன் மட்டுமல்லாமல், இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் சீரிஸில் 'கயல்' சந்திரமௌலி, நிதின் சத்யா, சார்லி மற்றும் குமரவேல் உட்பட பல முக்கிய நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள்" என்றார்.

இதனைத்தொடர்ந்து பேசிய வாணிபோஜன் கூறுகையில், ''ஹாட்ஸ்டாரின் மற்றொரு படைப்பில் இணைவது பெரும் மகிழ்ச்சி. யோகிபாபுவுடன் நடிப்பது இதுவே முதன்முறை. எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில் பணிபுரியப் போகிறேன். கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். அட்டகாசமான சீரிஸாக இது இருக்கும்" என்றார்.

மேலும், நடிகர் யோகிபாபு கூறுகையில், "சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து பார்க்கும்படியான ஒரு அருமையான சிரீஸாக "சட்னி சாம்பார்" இருக்கும்" என்றார்.

இதையும் படிங்க:Keerthy Suresh: பாலிவுட்டில் களமிறங்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்!

ABOUT THE AUTHOR

...view details