தமிழ்நாட்டில் கோடைகாலம் தொடங்கி உள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் வெப்பம் வாட்டி எடுக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, சென்னையில் கடந்த 18ஆம் தேதி மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகப்பட்சமாக 42.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியிருந்த ஆம்பன் புயல் நேற்றைய தினம், மேற்கு வங்காளத்தில் கரையைக் கடந்த நிலையில், இதன் தாக்கம் தற்போது தமிழ்நாடு கடலோர மாவட்டத்தில் தென்படுகின்றது. குறிப்பாக, சென்னையில் கடந்த சில நாட்களாக வெப்பம் குறைவாக இருந்தாலும் வெக்கை அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
'தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாட்களுக்கு வெப்பக் காற்று வீசும்' - வானிலை ஆய்வு மையம் - Hot winds in Tamil Nadu for the next three days
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாட்களுக்கு வெப்பக் காற்று வீசும் என்பதால் பொதுமக்கள், விவசாயிகள், குழந்தைகள் ஆகியோர் நண்பகலில் வெளியே வர வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
!['தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாட்களுக்கு வெப்பக் காற்று வீசும்' - வானிலை ஆய்வு மையம் சென்னை வானிலை ஆய்வு மையம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7293512-thumbnail-3x2-ddd.jpg)
அதன்படி தொடர்ந்து சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் கடுமையாக வெப்பம் பதிவாகி வருகின்றது.
இந்நிலையில், இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "அடுத்த 48 மணி நேரத்திற்கு மேற்குத் தொடர்ச்சிமலையை ஒட்டியுள்ள மாவட்டங்களான கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகரில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை, மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு வெப்பக் காற்று வீசும் என்பதால், பொதுமக்கள், விவசாயிகள், குழந்தைகள் ஆகியோர் நண்பகல் 11.30 மணி முதல் 3.00 மணி வரை வெளியே வர வேண்டாம்" என அறிவுறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கன்னியாகுமரியில் வீசிய சூறைக்காற்று - பல ஏக்கர் வாழை மரங்கள் சேதம்