தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காங்கிரஸ் பிரமுகருக்கு அரிவாள் வெட்டு: சிசிடிவி காட்சிகள் வெளியீடு! - horrific murder congress party member

சென்னை: அயனாவரம் அருகே காங்கிரஸ் கட்சி பிரமுகரை சரமாரியாக மூன்று பேர் கொண்ட கும்பல் வெட்டும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

சிசிடிவி காட்சிகளின் பதிவு
சிசிடிவி காட்சிகளின் பதிவு

By

Published : Aug 6, 2020, 3:25 PM IST

சென்னை அயனாவரம் முத்தம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (45). காங்கிரஸ் கட்சி பிரமுகரான இவர், அதே பகுதியில் ஆதவன் சூப்பர் மார்க்கெட் என்ற பெயரில் பல் பொருள் அங்காடி நடத்தி வருகின்றார்.

இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 6) இரவு சரவணன் தனது சூப்பர் மார்க்கெட் வாசலில் நின்று அழைபேசியில் பேசிக்கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த மூன்று பேர் கொண்ட கும்பல், அரிவாளால் சரவணனை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.

சிசிடிவி காட்சிகளின் பதிவு

இதில் படுகாயமடைந்த சரவணனை உடனே பக்கத்துக் கடைக்காரர்கள் மீட்டு, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். தற்போது மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவலறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்குச் சென்று சிசிடிவி காட்சிகளின் பதிவுகளின் அடிப்படையில் தப்பிச் சென்ற கும்பலை தேடி வருகின்றனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ரவுடி ஒருவரை சரமாரியாக வெட்டி கொலை செய்யும் சிசிடிவி காட்சி வெளியீடு!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details