சென்னை: புரசைவாக்கம் மூக்காத்தாள் தெருவில் ஹூக்கா பார் செயல்பட்டு வருவதாக வேப்பேரி காவல் துறையினருக்கு ரகசியத்தகவல் கிடைத்தது. அதன்பேரில் உதவி ஆணையர் தனிப்படைப் பிரிவு காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச்சென்று சோதனை நடத்தினர்.
சோதனையில் சட்டவிரோதமாக ஹூக்கா பார் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து பாரில் இருந்த 5 ஜாடி, 10 பைப், 2 கிலோ ஹூக்கா ஆகியவற்றைக் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், பார் மேலாளர் மணீஷ்ஜோஷி (24) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர்.