சென்னை: 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் ஜூலை 28ஆம் தேதி தொடங்கியது. ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில், போட்டியின் எட்டாவது சுற்று இன்று (ஆக.6) மதியம் தொடங்கியது. இந்த போட்டி தொடங்கிய சில மணி நேரங்களிலேயே ஹாங்காங்கைச் சேர்ந்த செஸ் வீரர் லூக் என்பவர் நடுவர் தவறாக முடிவை அறிவித்ததாக கூறி அரங்கிற்கு வெளியே தர்ணாவில் ஈடுபட்டார்.
செஸ் ஒலிம்பியா போட்டியில் ஹாங்காங் வீரர் திடீர் தர்ணா முன்னதாக, ஹாங்காங் ஹைடி அணியை எதிர்கொண்டது. இதில் ஹாங்காங் அணியில் முதல் இருக்கையில் விளையாடிய லூக், ஹைடி அணியின் ஜூடி - உடன் விளையாடினார். இந்த போட்டியில் ஜூடி மூன்று முறை ஒரே காயை ஒரே இடத்தில் நகர்த்தினார்.
இதனால் ஹாங்காங் அணி லூக் வெற்றியென அறிவிக்கப்பட்டது. ஆனால், சில நிமிடங்கள் கழித்து மீண்டும் நடுவர் டிரா என்று அறிவித்துவிட்டார். இந்த முடிவை எதிர்த்து லூக் அரங்கத்தின் வாயிலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
நடுவர் தனது முடிவினை மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் செய்தியாளர் சந்திப்பில் கோரிக்கை வைத்தார். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதற்குப் பிறகு அந்த அணியைச் சேர்ந்த பயிற்சியாளர் சமாதானமாக பேசி அவரை அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: காமன்வெல்த் கிரிக்கெட் போட்டி : இங்கிலாந்தை தோற்கடித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்த இந்தியா