சென்னை: சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில், வாஞ்சிநாதன் மற்றும் லோகேஷ் ஆகிய இருவரும் அறை எடுத்து தங்கி உள்ளனர். இந்நிலையில், தனியார் விடுதியில் தங்கி இருந்த இருவரும் மது அருந்தி விட்டு போதையில் இருந்தபோது, இருவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அதில் வாஞ்சிநாதன் லோகேஷை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். பின்னர் உடல்களைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, நொளம்பூர் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அம்பத்தூரைச் சேர்ந்த வாஞ்சிநாதன், தனக்கு திருமணம் நிச்சயமான நிலையில், லோகேஷியிடமிருந்து நெருக்கம் காட்டுவதை தவிர்த்து உள்ளார்.
ஆனால், லோகேஷின் தொல்லை அதிகமானதால், அவரை கொலை செய்ய முயற்சி செய்து, நேற்று (ஜன.11) இரவு கொலை செய்து விட்டு, வாஞ்சிநாதனும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக, காவல் துறையினரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. முன்னதாக, நொளம்பூர் காவல் நிலையத்தில், இரண்டு நாட்களுக்கு முன்பு லோகேஷ் காணவில்லை என அவரது உறவினர் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று இரவு அம்பத்தூர் காவல் நிலையத்தில் வாஞ்சிநாதன் காணவில்லை என அவரது குடும்பத்தார் புகார் கொடுத்திருந்த நிலையில், தற்போது லோகேஷ் கொலை செய்யப்பட்டும், வாஞ்சிநாதன் தற்கொலை செய்து கொண்டு, தனியார் விடுதி ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:கம்பம் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் - சிறப்புச் சார்பு ஆய்வாளருக்கு ஆயுள் தண்டனை!