தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொடர் கண்காணிப்பில் 12,519 பேர்! - Corona patients in Tamil Nadu

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 12,519 பேர் வீடுகளில் தொடர் கண்காணிப்பில் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

Home serial surveillance of 12,519 people in tamilnadu
Home serial surveillance of 12,519 people in tamilnadu

By

Published : Mar 23, 2020, 9:01 PM IST

மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய 4 விமான நிலையங்களில் இன்றைய நிலவரப்படி ( மார்ச் 23ஆம் தேதி) 2 லட்சத்து 9 ஆயிரத்து 35 பயணிகள் வெப்பப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 12 ஆயிரத்து 519 பயணிகள் வீட்டில் 28 நாள்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறையின் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். மேலும் தொற்று அதிகளவில் பரவியுள்ள நாடுகளிலிருந்து வந்த 21 பயணிகள் விமான நிலையங்களின் அருகில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர்.

மருத்துவமனையில் தனி வார்டில் 89 பயணிகள் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். 552 பயணிகளின் ரத்தப் பரிசோதனை மாதிரிகள் பெறப்பட்டு, 512 பயணிகளின் ரத்த மாதிரிகளின் முடிவுகள் பெறப்பட்டுள்ளன.

அவற்றில் 503 பயணிகளுக்கு நோய்த் தொற்று இல்லை எனவும், 9 பயணிகளுக்கு நோய்த்தொற்று உள்ளது எனவும் கண்டறியப்பட்டுள்ளது. 40 பயணிகளின் ரத்த மாதிரிகள் பரிசோதனை ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பாகிஸ்தான் அமைச்சருக்கு கரோனா பாசிட்டிவ்!

ABOUT THE AUTHOR

...view details