தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல், மே மாதத்தில் நடக்கலாம் என எதிர்பார்க்ப்படும் நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பரப்புரையைத் தொடங்கிவிட்டன. அந்த வகையில், தேசிய கட்சியான பாஜக ஏற்கனவே தேர்தல் பரப்புரையைத் தொடங்கி, பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பாஜக சார்பில் இளைஞரணி மாநாடு வரும் பிப்ரவரி ஆறாம் தேதி சேலத்தில் நடைபெறவுள்ளது. இதில், பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ்.பி செல்வம் தலைமை தாங்குகிறார்.