சென்னை நங்கநல்லூர், 37ஆவது தெருவில் வசித்து வருபவர் விவேகானந்தன் (58). இவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 14) இரவு 12 மணியளவில் வீட்டை பூட்டி விட்டு மாடியில் இருவரும் உறங்க சென்றனர். அதிகாலை 6 மணியளவில் எழுந்து வந்து பார்த்த போது வீட்டின் கதவு திறந்திருந்ததைக் கண்டு இருவரும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக வீட்டினுள் சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 35 சவரன் தங்க நகை, வைர நகைகள் மாயமாகி இருந்தது.
காரில் ஒரு சாவியை வீட்டின் உரிமையாளர் வைத்துவிட்டு சென்றதால் அந்தச் சாவியை எடுத்து திருட்டுச் சம்பவத்தை அரங்கேற்றி இருப்பது தெரியவந்தது.
இது குறித்து பழவந்தாங்கல் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் கைரேகை பதிவுகளை பதிவுசெய்து அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:IPL 2021 கிங்ஸ் vs சூப்பர் கிங்ஸ்: வான்கடேவில் வாணவேடிக்கை காட்டப்போவது யார்?