தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தீபாவளிக்கு முந்தைய நாள் விடுமுறை - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு! - பள்ளிக்கல்வித்துறை

சென்னை: தீபாவளிக்கு முந்தைய நாளான 26ஆம் தேதியினை விடுமுறை தினமாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தீபாவளிக்கு முந்தைய நாள் விடுமுறை

By

Published : Oct 9, 2019, 7:17 PM IST

சென்னையில் பள்ளிக் கல்வித் துறை தீபாவளிக்கு முந்தைய நாளான 26ஆம் தேதியில் அனைத்து பள்ளிகளும் செயல்படும் என அறிவித்திருந்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை விடப்பட்டிருந்தது.

இதனை பரிசீலித்த பள்ளிக் கல்வித் துறை தீபாவளிக்கு முந்தைய நாளான 26ஆம் தேதி சனிக்கிழமையை விடுமுறை தினமாக அறிவித்துள்ளது. இதனால் பிறமாவட்டங்களில் இருந்து வந்து பல்வேறு பணியிடங்களில் பணி செய்யும் ஆசிரியர்களும் மாணவர்களும் நிம்மதி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: மாணவர்கள், ஆசிரியர்களுக்கு மாலை அணிவித்து மேளதாளம் முழங்க வரவேற்பு!

ABOUT THE AUTHOR

...view details