சென்னை: தமிழ்நாட்டில் தொடர் கனமழை காரணமாக கடலூர், அரியலூர், விழுப்புரம், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, சேலம், கரூர், மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல், சிவகங்கை, திருப்பத்தூர், தர்மபுரி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 28 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
தமிழ்நாட்டில் தொடர் கனமழை காரணமாக 28 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்றும் (நவம்பர் 11) நாளையும் (நவம்பர் 12) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்ற நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் அடுத்து 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் நவம்பர் 10ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை மிதமானது முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:17 மாவட்டங்களில் கனமழை; மீனவர்களுக்கு வார்னிங் - வானிலை ஆய்வு மையம்