தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 8, 2021, 7:06 AM IST

Updated : Nov 8, 2021, 7:58 AM IST

ETV Bharat / state

தொடர் மழை: பள்ளி கல்லூரிகளுக்கு இரண்டு நாட்களுக்கு விடுமுறை

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகத் தமிழ்நாட்டில் 21 மாவட்டங்களுக்குப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 12 மாவட்டங்களுக்குக் கல்லூரிகளுக்கும் விடுமுறை விடுமுறை அளித்து சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

holiday for school  school holiday  school leave due to rain  rain  heavy rain  holiday for school due to heavy rain  school leave  பள்ளிகளுக்கு விடுமுறை  மழை காரணமாக பள்ளிகளிக்கு விடுமுறை  மழை  கனமழை  பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை  கல்லூரிகளுக்கு விடுமுறை
பள்ளிகளுக்கு விடுமுறை

தொர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகுய நான்கு மாவட்டங்களுக்கு இரண்டு (நவ. 8,9) நாள்கள் பள்ளிகளுக்கு விடுமுறை எனவும், இன்று (நவ.8) ஒருநாள் மட்டும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்றும் அரசு அறிவித்துள்ளது.

இதையடுத்து புதுச்சேரியில் இரண்டு (நவ.8,9) நாள்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தஞ்சாவூர், சேலம், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், திருப்பத்தூர், கரூர் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களுக்கு இன்று (நவ. 8) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மழையினால் மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, ராணிபேட்டை, நாமக்கல், வேலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திருவாரூர், நாகப்பட்டிணம், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு இன்று (நவ.8) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் சென்னையில் ஆவின், மின்சாரம், போக்குவரத்து, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய துறைகள் தவிர்த்து மற்ற அரசு அலுவலகங்களுக்கு இன்று (நவ.8) விடுமுறை எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: பொதுத்தேர்வு ஒத்திவைப்பு - அரசு தேர்வுகள் இயக்குநர்

Last Updated : Nov 8, 2021, 7:58 AM IST

ABOUT THE AUTHOR

...view details