சென்னை:கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள சீ கிளிப் அவென்யூ 5ஆவது தெருவில் ஹிப் பாப் ஆதியின் வீடு உள்ளது. இந்த வீட்டில் நேற்றிரவு காரில் வந்த சிலர் கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதனால், வீட்டின் ஜன்னல், கண்ணாடிகள் உடைந்தன.
அப்போது வீட்டில் யாருமில்லாததால், எதிர் வீட்டார் கானத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணையை தொடங்கினர்.