நாட்டின் முன்னணி விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், கடன் சுமையால் கடந்த ஏப்ரல் மாதம் முதல் அதன் சேவைகள் நிறுத்தியுள்ளது.
இந்த நிறுவனம் பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட வங்கிகளின் கூட்டமைப்புக்கு எட்டாயிரத்து 230 கோடி ரூபாயும், ஊழியர்கள், கடனாளர்களுக்கு ஆறாயிரத்து 400 கோடி ரூபாயும் கடன் பாக்கி வைத்துள்ளது.
கடனை திரும்பப் பெற வங்கிகள், கடனாளர்கள் ஜெட் ஏர்வேஸ் விற்பனையை நம்பி காத்திருக்கும் நிலையில், பல்வேறு காரணங்களால் அதில் சிக்கல் நீடித்துவருகிறது. இதனை வாங்க விருப்பமுள்ளவர்களுக்கான விண்ணப்ப காலக்கெடு பல முறை நீட்டிக்கப்பட்டும் எதிர்பார்த்த முடிவு கிடைக்கவில்லை.
இந்நிலையில், இங்கிலாந்தைச் சேர்ந்த ஹிந்துஜா குழுமம் வரும் ஜனவரி 15ஆம் தேதிக்குள் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை வாங்க விருப்ப மனு அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இது குறித்து, அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை.
இதையும் படிங்க: அமீரகத்தில் ஸ்பைஸ் ஜெட் விமான சேவை.
!