சென்னை: கடந்த மாதம் 26 மற்றும் 27ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தண்டாயுதபாணி சுவாமி மூலவர் சன்னிதானத்தில் அமைச்சர்கள் சேகர் பாபு, சக்கரபாணி, திண்டுக்கல் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி உள்ளிட்ட திமுகவினர் கோயிலின் ஆகம விதிகளுக்கு எதிராக சட்ட விரோதமாக கருவறைக்குள் புகுந்து கதவை மூடியதாக சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வைரலாக பரவியது.
இந்த சம்பவம் குறித்து இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் சென்னை அசோக் நகரில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் மூலவர் சிலை ஆய்வுக் குழுவினருடைய அறிக்கைகள் பொதுமக்களுக்கு எதுவும் தெரிவிக்காத நிலையில், சுவாமி திருமேனியின் உறுதித் தன்மை பலப்படுத்தாமல் கடந்த 26ஆம் தேதி ஏழாம் கால பூஜை நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அந்த சமயத்தில் கோயில் கருவறைக்குள் இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, அமைச்சர் சக்கரபாணி, திண்டுக்கல் எம்.பி. வேலுச்சாமி, நீதியரசர்கள், காவல் துறை உயர் அதிகாரிகள், இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கருவறைக்குள் புகுந்து கதவை மூடிக்கொண்டனர்.