தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Annapoorani arasu amma:  அன்னபூரணியை கைது செய்யக்கோரி இந்து அமைப்புகள் புகார் - போலி சாமியார் அன்னபூரணியை கைது செய்யக் கோரி புகார்

Annapoorani arasu amma: போலி சாமியார் அன்னபூரணியை கைது செய்ய வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்து அமைப்பு நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர்.

போலி சாமியார் அன்னபூரணி மீது குற்றச்சாட்டு
போலி சாமியார் அன்னபூரணி மீது குற்றச்சாட்டு

By

Published : Dec 28, 2021, 7:23 PM IST

Annapoorani arasu amma: சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழ்நாடு இந்து சேவா சங், பாரத் முன்னணி உள்பட 5 இந்து அமைப்பு நிர்வாகிகள் இணைந்து புகார் ஒன்றை அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாரத் முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் சிவாஜி, "கடந்த 27ஆம் தேதி சமூக வலைத்தளங்களில் அன்னபூரணி அரசு என்பவர் தன்னை கடவுளின் அவதாரம் எனவும், அன்னை ஸ்ரீ ஆதிபராசக்தியின் அவதாரம் எனவும் கூறிக்கொண்டு அருள் வாக்கு வழங்கும் வீடியோ ஒன்று வைரலானது.

அன்னபூரணியை கைது செய்ய வேண்டும்

குறிப்பாக அன்னபூரணி என்பவர் தனது கணவரைப் பிரிந்து வேறொரு பெண்ணின் கணவரோடு இணைந்து வாழப்போவதாக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் குறிப்பிட்டுள்ளார். தனி மனித ஒழுக்கமின்றி நடந்து கொள்ளும் அன்னபூரணி கடவுளின் அவதாரம் என பொய்யான பரப்புரை செய்து வருகிறார்.

போலி சாமியார் அன்னபூரணி மீது குற்றச்சாட்டு

இந்து மக்களை கடவுள் என நம்பவைத்து மூளைச்சலவை செய்து வரும் போலி பெண் சாமியார் அன்னபூரணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சாமியார் எனத் தெரிவிக்கலாம். ஆனால் கடவுளின் அவதாரம் எனத் தெரிவிக்க அன்னபூரணிக்கு என்னத் தகுதி உள்ளது. அன்னபூரணி மீது மத நம்பிக்கைகளை இழிவுபடுத்துதல், இரு பிரிவினரிடையே மோதலை உண்டாக்கும் வகையில் செயல்படுதல், மதம் தொடர்பான விரோத உணர்ச்சியைத் தூண்டுவிடுதல் உள்ளிட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க:மாணவனை காதலித்த பெண் ஆசிரியர் போக்சோவில் கைது

ABOUT THE AUTHOR

...view details