இந்து முன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை வடபழனி கோயிலுக்கு சொந்தமான சுமார் 300 கோடி மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இந்து சமய அறநிலைத்துறை அமைச்சராக சேகர்பாபு பொறுப்பேற்றவுடன் கோவில் நிலங்களை மீட்கு முயற்சி எடுத்து வருகிறார். அதேபோல கோயில் சொத்துக்கள், நிலங்கள், நகைகளை ஆவணப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
சென்னை சாலிகிராமம், காந்திகிராமம் பகுதியில் உள்ள வடபழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான ரூ.300 கோடி மதிப்புள்ள 5.5 ஏக்கர் நிலம் பெண்கள் விடுதி கட்டுவதற்கு குத்தகை விடப்பட்டது. அந்த இடத்தில் பல்வேறு பிரிவினர் ஆக்கிரமிப்பு செய்தார்கள். குறிப்பாக சினிமா துறையினர் வாகனம் நிறுத்தும் இடமாக மாற்றப்பட்டது.
இது சம்பந்தமாக பல்வேறு தரப்பினர் புகார் அளித்தும் இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நேற்றைய தினம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் முயற்சியில் இந்த இடம் மீட்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கின்றது.