தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அத்திவரதரை தரிசிக்கும் பக்தர்களுக்கு வசதி தேவை - இந்து முன்னணி கோரிக்கை - இந்து முன்னணி

சென்னை: அத்திவரதரை தரிசிக்கவரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துகொடுக்க வேண்டும் என இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராமகோபாலன் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

hindu munnani

By

Published : Jul 14, 2019, 5:10 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”வரலாற்று சிறப்புமிக்க அத்திவரதர் தரிசன நிகழ்ச்சியில் வேண்டிய ஏற்பாடுகளை செய்ய தமிழ்நாடு முதல்வர் தனி கவனம் செலுத்திட வேண்டுகிறோம். நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கும் அத்திவரதரை காண சாதாரண பொதுமக்கள், பல முக்கிய பிரமுகர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

அதன்படி ஜூலை 1ஆம் தேதி முதல் தற்போது வரை பல லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளார்கள். ஆனால் அத்திவரதரை தரிசிக்க காஞ்சிபுரம் வரும் பக்தர்களுக்கு அவசியமான வசதிகள் செய்து தருவதில் குறைபாடு உள்ளது. இதுபோல, கடந்த வருடம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கும்பமேளா நடைபெற்றபோது அந்த மாநில அரசு மிகச் சிறந்த ஏற்பாடுகளை செய்திருந்தது. அங்கு ஏற்பாடு செய்த அதிகாரிகளிடம் ஆலோசனை கேட்டு, அதிவிரைவாக இங்கும் அதுபோன்ற ஏற்பாடுகளை செய்யலாம்.

எனவே, குடிநீர் வசதி, தேவையான அளவிற்கு மொபைல் டாய்லெட் வசதி, பந்தல் ஆகியவற்றை அமைக்க வேண்டும். வரிசையில் நிற்பவர்கள் பசியாறிட, பிஸ்கெட் போன்ற சிறு உணவுகள் விற்பனைக்கு ஏற்பாடு செய்யலாம். அல்லது சேவை நிறுவனங்கள் மூலம் பிரசாதமாக விநியோகம் செய்யச் சொல்லலாம்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ளதுபோல் மூன்று வரிசையாக தரிசிக்க ஏற்பாடு செய்தால், காலதாமதம் வெகுவாக குறையும். முதியோர்கள், கைக் குழந்தையோடு வருபவர்கள், கர்ப்பிணி பெண்கள் ஆகியோர் செல்வதற்கான பேட்டரி கார் வசதி, அழைத்து செல்ல தன்னார்வ தொண்டர்களையும் ஏற்பாடு செய்ய வேண்டும். வயதானவர்கள், நோயாளிகள் உள்ளிட்டோருக்கு ஏற்படும் உடல்நலக் குறைவை சமாளிக்க மருத்துவர்கள் குழுவை ஏற்பாடு செய்யவேண்டும்.

இவை தவிர, ஒரு குழு அமைத்து, அவ்வவ்போது ஏற்படும் குறைபாடுகளை களைந்து, சிறப்பான ஏற்பாடுகளை செய்துதந்து, அத்தி வரதரின் பேரருளையும், தமிழ்நாடு மக்களின் அன்பையும் தாங்கள் பெற்றிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என கூறப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details